கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ அந்தஸ்து – ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை விரும்புகிறது என்றும், அந்த அமைப்பில் கனடா ஒரு “இணை உறுப்பினராக” (associate member) இணைய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது என்றும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கடந்த காலங்களில் உறுப்பினர் சேர்க்கை விதிகள் விஷயத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படாத ஐரோப்பிய ஒன்றியம், தற்போது கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ என்ற புதிய அந்தஸ்தை வழங்குவது குறித்த யோசனையை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள கனடியத் தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர், இது குறித்த கருத்து கோரிய தனித்தனி வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கவில்லை.




