ஐரோப்பா

வேல்ஸில் பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு – தாய்க்கு அழைப்பு

  • September 29, 2026
  • 0 Comments

வேல்ஸில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் தாமாக முன்வர வேண்டும் என வேல்ஸ் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மெனாய் ஜலசந்தி கடற்கரையோரத்தில் பொதுமக்களில் ஒருவர் சடலத்தை அவதானித்து காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்தே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் தாயின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவர் தாமாகவே முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ​​பெட்சி காட்வாலட்ர் பல்கலைக்கழக Betsi Cadwaladr […]

உலகம்

காலநிலை மாற்றம் – கொறித்துண்ணிகளால் பரவும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

  • September 29, 2026
  • 0 Comments

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகரித்த மழைப்பொழிவு, லாசா காய்ச்சல் போன்ற கொறித்துண்ணிகளால் பரவும் நோய்களின் பரவலைத் தூண்டக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லாசா காய்ச்சலால் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும், சுமார் 5000 பேர் வரை உயிரிழக்கின்றனர். குறிப்பாக    கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் மிகவும் ஆபத்தாக அமைகிறது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் இது மரணத்தை ஏற்படுத்துகிறது எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 30 ஆண்டுகால கொறித்துண்ணித் […]

உடல்தகுதி பிரச்சினைகளுக்குப் பிறகு, சீன ஓபன் தொடரில் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் களம் காணும் நோவாக் ஜோகோவிச், தனது உடல்நிலை தற்போது சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

சீன ஓபன் தொடரில் களமிறங்கும் Novak Djokovic

  • September 29, 2026
  • 0 Comments

உடல்தகுதி பிரச்சினைகளுக்குப் பிறகு, சீன ஓபன் தொடரில் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் களம் காணும் நோவாக் ஜோகோவிச், தனது உடல்நிலை தற்போது சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீன ஓபன் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், “ஆம், இதுவரை நிலைமை நன்றாகவே உள்ளது” என்று கூறினார். கடந்த ஆகஸ்ட் ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடரின் முதல் சுற்றில் மரியானோ நவோனிடம் (Mariano Navone) எதிர்பாராத தோல்வியைச் […]

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த FIFA தலைவர் Gianni Infantino, உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பின் உறுப்பினர் சங்கங்களுக்கு பல மில்லியன் டாலர்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

உறுப்பு நாடுகளை வளைத்துபோட FIFA தலைவர் புது வியூகம்

  • September 29, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த FIFA தலைவர் Gianni Infantino, உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பின் உறுப்பினர் சங்கங்களுக்கு பல மில்லியன் டாலர்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். FIFA தலைவராக Gianni Infantino 10 ஆண்டுகளாக பதவி வகிக்கின்றார். அவரின் தலைமைப் பதவி குறித்து தற்போது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், இப்பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிட தயாராகி வருகின்றார். இந்நிலையிலேயே ஆதரவு திரட்டும் நோக்கில் அவர் இந்த நகர்வை முன்னெடுத்து வருகின்றார். அமெரிக்க ஊடகங்கள் திங்கள்கிழமை […]

வடக்கு காசா முனையிலுள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படையின் தலைவரான 'இஸ் அல்-டின் அல்-பைக்' (Izz al-Din Al-Beik) , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

ஹமாஸ் ஆயுதப்படை தளபதியையும் கொன்றுவிட்டோம் – இஸ்ரேல் அறிவிப்பு

  • September 29, 2026
  • 0 Comments

வடக்கு காசா முனையிலுள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படையின் தலைவரான ‘இஸ் அல்-டின் அல்-பைக்’ (Izz al-Din Al-Beik) , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களைத் திட்டமிட்டது மற்றும் போராளிகளைப் படையில் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அல்-பைக்கை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். அல்-பைக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி ஹமாஸ் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் சுற்றுலா பயணி மீது கத்திகுத்து தாக்குதல்

  • September 29, 2026
  • 0 Comments

ஸ்பெயின் – பார்சிலோனாவில் உள்ள  நட்சத்திர விடுதியொன்றில்  தங்கியிருந்த சுற்றுலா பயணி மீது கத்துக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 23 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரின்  கழுத்தில் இருமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல் காசா ஃபுஸ்டர்’ (Hotel Casa Fuster) என்ற இடத்தில் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல்  சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தாக்குதல்தாரிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்காக அனைத்தையும் செய்வோம்: அரசு உறுதி

  • September 29, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரி சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இதற்காக சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் […]

உலகம்

எகிப்தில் 1700 ஆண்டுகள் பழமையான பிரமிட் வடிவ கல்லறை கண்டுபிடிப்பு

  • September 29, 2026
  • 0 Comments

எகிப்தின் மேற்குப் பாலைவனப் பகுதியில், ரோமானியக் காலத்தைச் சேர்ந்த 1,700 ஆண்டுகள் பழமையான பிரமிட் வடிவக் கல்லறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நீதிபதியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் ‘பிசிஸ்தெஸ்’ (Bisichthes) எனும் செல்வாக்குமிக்க ஒருவருக்காக எழுதப்பட்ட, 19 வரிகளைக் கொண்ட துக்கப் பாடல் அடங்கிய கல்வெட்டு ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டது. சூரியக் கடவுளான ‘ரா’ (Ra)-வைச் சித்தரிக்கும் சித்திர எழுத்துகள் (hieroglyphs) உள்ளிட்ட எகிப்திய மதக் கட்டடக்கலை அம்சங்களையும், கிரேக்க நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கல்வெட்டுகளையும் இந்தக் […]

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

  • September 29, 2026
  • 0 Comments

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்த அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஞானசார தேரர் மீது விதிக்கப்பட்ட […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு

  • September 29, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னம் இன்று அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதன்போது  சமூகப் பராமரிப்புக்கு நிதியளிப்பதற்காக ஓய்வூதிய மும்முனைப் பூட்டை (pentance triple lock) ரத்து செய்யவது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் சில முக்கிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும்  பர்னமின் இந்த உரை அரசியல் தலைவர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.