திலீபன் சிலை அகற்றம்: அரசாங்கம் கூறுவது என்ன?
“புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும், அவ்வமைப்பின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது, நினைவு கூருவதற்கும் சட்டத்தில் இடமில்லை. எனவே, சட்டவிரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அது தொடர்பில் சட்டம் அமுலாகும்.”- என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போது, திலீபனின் சிலை விவகாரம் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு “வடக்கில் முன்னைய காலப்பகுதி முதலே திலீபனுக்கு […]













