ஐரோப்பா

ரஷ்யாவில் மேலும் 10,000 துருப்புகளைக் களமிறக்கும் வடகொரியா

  • September 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 8,000 துருப்புகளுடன் கூடுதலாக 10,000 துருப்புகளை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மாஸ்கோ மற்றும் பியாங்யாங் இடையேயான ராணுவக் கூட்டுறவு அதிகரித்து வருவதை இது காட்டுவதாகவும், இது போரின் தன்மையை மேலும் தீவிரமடையச் செய்யும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வட கொரியா மற்றும் ரஷ்யாவின் இந்த ஆபத்தான கூட்டணியைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்பும் உடனடி மற்றும் கூட்டான நடவடிக்கைகளை எடுக்க […]

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் RAF Fairford விமானத் தள சம்பவத்தின் பின்னணியில் "வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் கை ஓங்கியுள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

RAF Fairford சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி: அமெரிக்கா தகவல்

  • September 29, 2026
  • 0 Comments

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் RAF Fairford விமானத் தள சம்பவத்தின் பின்னணியில் “வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் கை ஓங்கியுள்ளது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு பிரித்தானியாவில் RAF Fairford விமானத் தளத்தில் பிரித்தானியா காவல்துறை அவசர சூழலை அறிவித்ததுடன், பிரித்தானியா அரசாங்கம் தேசிய அவசரகாலக் கூட்டத்தையும் நடத்தியது. இந்நிலையில் இச்சம்பவம் […]

தியாக தீபம் திலீபனின் சிலைக்கு எதிரான ஓர் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சித்தரிப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திட்டமிட்ட செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை செய்தி

திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் தமிழரசுக் கட்சியா?

  • September 29, 2026
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் சிலைக்கு எதிரான ஓர் ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சித்தரிப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திட்டமிட்ட செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இது தன் மீது மட்டுமல்ல, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் திட்டமிட்டுக் களங்கப்படுத்துகின்ற செயல் என்றும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “நானும் […]

“ஜனநாயகத்தை இல்லாதொழித்து இலங்கையை வடகொரியாபோல் ஆக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியை வடகொரியாவுடன் ஒப்பிடுகிறது சஜித் அணி

  • September 29, 2026
  • 0 Comments

“ஜனநாயகத்தை இல்லாதொழித்து இலங்கையை வடகொரியாபோல் ஆக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “நீதித்துறை விவகாரத்தில் கையடிப்பதற்காகவே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியாகவே இச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் […]

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பஸ்களை மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (29) முற்பகல் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

112 மெட்ரோ பஸ்கள் சேவையில் இணைப்பு

  • September 29, 2026
  • 0 Comments

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பஸ்களை மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (29) முற்பகல் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது. கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நவீன மெட்ரோ பஸ் சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் […]

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலுள்ள கோப்ரி (Kopri) காவல் நிலையத்திற்குள்ளேயே, ஆளுங்கட்சியான சிவசேனாவின் இளைஞரணித் தலைவரான சித்தேஷ் அபங்கே (Siddhesh Abhange) தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

காவல் நிலையத்துக்குள் சிவசேனா இளைஞரணித் தலைவர்மீது தாக்குதல்

  • September 29, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலுள்ள கோப்ரி (Kopri) காவல் நிலையத்திற்குள்ளேயே, ஆளுங்கட்சியான சிவசேனாவின் இளைஞரணித் தலைவரான சித்தேஷ் அபங்கே (Siddhesh Abhange) தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணப் பிரச்சினை தொடர்பாக சித்தேஷ் அபங்கேவிற்கும், ஜவுளித் தொழில் செய்து வரும் சில பெண் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்காக இரு தரப்பினரும் திங்கள்கிழமை இரவு கோப்ரி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, காவல் […]

உத்தரப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது நிர்வாகப் பணியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே அரசியலில் களமிறங்குவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்தியா செய்தி

அரசியல் களத்தில் குதித்தார் முன்னாள் IAS அதிகாரியான திவ்யா மிட்டல்

  • September 29, 2026
  • 0 Comments

உத்தரப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது நிர்வாகப் பணியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே அரசியலில் களமிறங்குவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இருப்பினும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், மக்களுடன் இணைந்து சுயேச்சையான அரசியல் பயணத்தைத் தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்பு நான் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தேன். ‘அடுத்து என்ன, யாருடன், எங்கிருந்து?’ என்ற கேள்விகளுக்குப் […]

இந்தியாவின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விடக் குறைவாகும். இந்தியா செய்தி

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் 178 அணைகளில் நீர்மட்டம் சரிவு

  • September 29, 2026
  • 0 Comments

இந்தியாவின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பை விடக் குறைவாகும். நடப்பு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உருவான ‘எல் நினோ’ காரணியின் வலுவான தாக்கத்தால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் […]

ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாகவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பதாகவும் தான் உறுதியளித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மறுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீதான தடைகளை நீக்க இணங்கினாரா ட்ரம்ப்?

  • September 29, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாகவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பதாகவும் தான் உறுதியளித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மறுத்துள்ளார். “இது முற்றிலும் உண்மையற்றது. நான் அவர்களுக்கு எதையும் வழங்க முன்வரவில்லை” என்று ‘ஆக்ஸியோஸ்’ (Axios) செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் […]

உலகம்

உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளில் 05 மில்லியன் ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்

  • September 29, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளில் தற்போது ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொழில்துறை ரோபோக்கள் இயங்கி வருவதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. தொழில்துறை ரோபோக்களின் உலகளாவிய செயல்பாட்டு இருப்பு கடந்த ஆண்டு 09 சதவீதமாக அதிகரித்து , சுமார் 5.08 மில்லியன் அலகுகளை எட்டியுள்ளது என்று சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பு (IFR) தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, தொழில்துறை ரோபோக்களின் வருடாந்திர நிறுவல்கள் 11  சதவீதம்  அதிகரித்து, முதல் முறையாக 600,000-ஐத் தாண்டி, 603,000 அலகுகளை எட்டியுள்ளன. “தொழில்துறை தன்னியக்கம் அதிவேகமாக முன்னேறி வருகிறது,” […]