ஐரோப்பா

ஸ்பெயினில் சுற்றுலா பயணி மீது கத்திகுத்து தாக்குதல்

ஸ்பெயின் – பார்சிலோனாவில் உள்ள  நட்சத்திர விடுதியொன்றில்  தங்கியிருந்த சுற்றுலா பயணி மீது கத்துக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

23 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரின்  கழுத்தில் இருமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் காசா ஃபுஸ்டர்’ (Hotel Casa Fuster) என்ற இடத்தில் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல்  சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் தாக்குதல்தாரிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்