உலகம்

காலநிலை மாற்றம் – கொறித்துண்ணிகளால் பரவும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகரித்த மழைப்பொழிவு, லாசா காய்ச்சல் போன்ற கொறித்துண்ணிகளால் பரவும் நோய்களின் பரவலைத் தூண்டக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லாசா காய்ச்சலால் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும், சுமார் 5000 பேர் வரை உயிரிழக்கின்றனர். குறிப்பாக    கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் மிகவும் ஆபத்தாக அமைகிறது.

80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் இது மரணத்தை ஏற்படுத்துகிறது எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 30 ஆண்டுகால கொறித்துண்ணித் தரவுகளைப் பயன்படுத்தி ஒரு முன்கணிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

இதன்படி நைஜீரியாவில் இந்த தொற்று மனிதர்களுக்கு வேகமாக பரவுவதை புலப்படுத்துகிறது. அதேநேரம் கொறித்துண்ணிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னரே மனிதர்களுக்கு பரவுவதும் இனங்காணப்பட்டுள்ளது.

இது விரைவான நடவடிக்கையை எடுக்க வாய்ப்பை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்