இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்த அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஞானசார தேரர் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​ஞானசார தேரருக்காக முன்னிலையான சட்டத்தரணி அனுர மெட்டெகொட, தனது கட்சிக்காரர் உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும், சட்டமா அதிபரின் மனுவைப் படித்து வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் தருமாறும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாளர் சஜித் பண்டார, இந்த வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு சம்பந்தப்பட்டது எனச் சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து, ​​மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து, ஞானசார தேரரை ஒக்டோபர் 1 ஆம் திகதி
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை