உலகம்

எகிப்தில் 1700 ஆண்டுகள் பழமையான பிரமிட் வடிவ கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தின் மேற்குப் பாலைவனப் பகுதியில், ரோமானியக் காலத்தைச் சேர்ந்த 1,700 ஆண்டுகள் பழமையான பிரமிட் வடிவக் கல்லறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

நீதிபதியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் ‘பிசிஸ்தெஸ்’ (Bisichthes) எனும் செல்வாக்குமிக்க ஒருவருக்காக எழுதப்பட்ட, 19 வரிகளைக் கொண்ட துக்கப் பாடல் அடங்கிய கல்வெட்டு ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டது.

சூரியக் கடவுளான ‘ரா’ (Ra)-வைச் சித்தரிக்கும் சித்திர எழுத்துகள் (hieroglyphs) உள்ளிட்ட எகிப்திய மதக் கட்டடக்கலை அம்சங்களையும், கிரேக்க நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கல்வெட்டுகளையும் இந்தக் கல்லறை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளதாகவம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைனின் உருவம் பொறித்த வெண்கல நாணயம், மட்பாண்டங்கள் மற்றும் மணற்கல்லால் ஆன கழுவும் தொட்டி உள்ளிட்ட தொல்பொருட்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

அதேநேரம் அந்தக் காலகட்டத்தின் பன்முகக் கலாச்சார வரலாறு மற்றும் இறுதிச் சடங்கு முறைகள் குறித்த மதிப்புமிக்க தகவல்களை இந்த கண்டுபிடிப்புகள் வழங்குவதாக எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்