அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் ஒப்பந்தம் அமுலாகாமை குறித்து வத்திக்கான் கவலை

  • August 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) மற்றும் போப் லியோ (Pope Leo XIV) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. ” ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்ற திருப்பீடம் (Holy See), அதை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து […]

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

  • August 20, 2026
  • 0 Comments

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. உலகக் கால்பந்தாட்டத்தின் முக்கிய பிராந்தியக் கூட்டமைப்புகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றன என்று மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (UEFA), ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (AFC) , வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CONCACAF) ஆகிய முக்கிய அமைப்புகளே இத்தகைய […]

உலகம்

தலிபான் ஆட்சியில் பெண் துன்புறுத்தல் – ICC நீதிமன்றம் விசாரணை

  • August 20, 2026
  • 0 Comments

தலிபான்கள் பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பில் தனி விசாரணையைத் தொடங்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்ததாகக் கூறப்படும் குற்றங்களையும் உள்ளடக்கிய விசாரணையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விசாரணையில் வொஷிங்டன் தலையிடுவதை அல்லது அதன் அழுத்தத்தை குறைக்கிறது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான்களின் குற்றங்கள் குறித்த தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. “இந்த விசாரணை […]

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்குக்கு விரைந்த அமெரிக்க போர்க்கப்பல்: சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நகர்வு

  • August 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரின்போது மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் காணப்பட்ட மோசமான நிலைமைகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானந்தாங்கிப் போர்க்கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தைச் சென்றடைந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டமிடப்பட்ட பணியின் ஒரு பகுதியாக ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ (USS George Washington) விமானந்தாங்கிப் போர்க்கப்பல் அரபிக் கடலை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது […]

ஐரோப்பா

இந்துக்களின் புனித தினம் அவமதிப்பு – சுவிஸ் பிரஜைக்கு சிறை

  • August 20, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவிற்கு சுற்றுலாச் சென்ற சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு நீதிமன்றம், பாலினீசிய இந்துக்களின் புனிதமான அனுசரிப்பை அவமதித்ததற்காக, இன்று ஓராண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தெரியவருகிறது. 26 வயதான லூசியன் ஆண்ட்ரின் ஸ்க்ராகன் Luzian Andrin Zgraggen,  என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கி, அமைதியாக இருந்து தியானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படும் ‘மௌன நாள்’ குறித்து […]

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

பண ஆசைக்காகப் அதிபர் 27 முறை குத்திக் கொலை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

  • August 20, 2026
  • 0 Comments

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொண்டமல்லேபல்லி பகுதியிலுள்ள நாகார்ஜுனா அரசினர் பாடசாலையின் அதிபரும் இயக்குநருமான கல்லு ரூபா ரெட்டி (48) என்பவர், கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி காலை தனது வீட்டில் 27 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், தொலைபேசி அழைப்புகளை மனைவி […]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கை செய்தி

இந்திய தூதுவருடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு: அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு

  • August 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் கலந்துரையாடலின்போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதன் அவசியம் […]

உலகம்

ஜப்பானில் தண்டவாளத்தில் பணிப்புரிந்தவர்கள் மீது அதிவேக ரயில்மோதி விபத்து

  • August 20, 2026
  • 0 Comments

ஜப்பானில் ரயில் தண்டவாளத்தில் களைகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் அதிகவே ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று டோக்கியோவிற்கு வடக்கே உள்ள ஷின்-கனுமா Shin-Kanuma ரயில்  நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ நோக்கிச் சென்ற ஸ்பேசியா அதிவேக ரயில் மோதியே இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம் குறித்த நேரத்தில் பணியில் இருந்த மேலும் ஆறுபேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நெருங்கிக்கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் ஏன் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என்பதும், […]

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார். செய்தி பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்

  • August 20, 2026
  • 0 Comments

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார். 1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி பிறந்த இவர், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இலங்கை இசைத்துறையில் மிக முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க பாடகியாகத் திகழ்ந்தார். சமூகப் பிரச்சினைகள், மனித உறவுகள் மற்றும் அன்றாட வாழ்வியலை மையமாகக் கொண்ட இவரது பாடல்கள் மூலம், இலங்கை இசையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான குரலாக மாறினார். குறிப்பாக, […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

  • August 20, 2026
  • 0 Comments

குளிர்காலத்திற்கு முன்னதாக எரிவாயுவை சேமித்துவைக்க வேண்டிய சூழல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகள் ஆசியாவிற்கு அதிகளவில் திருப்பி விடப்படுவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் மற்றும் உலகின் எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம்  பங்களிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடல் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய எரிவாயு சேமிப்பிடம் ஜூலை மாத […]