ஐரோப்பா

UKவில் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி – 16000 பவுண்ட்ஸ் வரி

எடின்பர்க்கில் உள்ள இரண்டாவது வீடு வைத்திருக்கும்  உரிமையாளர்களுக்கு சொத்து வரியாக வருடத்திற்கு 16000 பவுண்ட்ஸை விதிக்கும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதற்கமைய இரண்டாவது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியாக தற்போது செலுத்தும் கட்டணத்தை விட 04 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியேற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில உரிமையாளர்களும் சொத்து நிபுணர்களும் எடின்பரோ நகர சபையின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது என விமர்சித்துள்ளனர்.

ஆனால், சில வீட்டுவசதி ஆர்வலர்கள் செல்வந்தர்களால் இந்த வரியை செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இரண்டாவது வீடு வைத்திருப்பவர்கள் அந்த வீடுகளை வாடகைக்கு விடவோ, அல்லது விற்பனை செய்யவோ முற்படுவதாகவும், இதன்காரணமாகவே கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன், எடின்பர்க் மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் உள்ள அமைச்சர்கள், தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்