இந்தியா செய்தி

பண ஆசைக்காகப் அதிபர் 27 முறை குத்திக் கொலை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொண்டமல்லேபல்லி பகுதியிலுள்ள நாகார்ஜுனா அரசினர் பாடசாலையின் அதிபரும் இயக்குநருமான கல்லு ரூபா ரெட்டி (48) என்பவர், கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி காலை தனது வீட்டில் 27 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், தொலைபேசி அழைப்புகளை மனைவி எடுக்காததால் அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோதே இக்கொலை வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவம் தொடர்பில் 5 சிறப்பு பொலிஸ் படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி (CCTV) காட்சிகள், தடயவியல் ஆதாரங்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொலை செய்யப்படுவதற்கு முன்னர் தனது அத்தையுடன் ரூபா ரெட்டி தொலைபேசியில் பேசியபோது, ‘பாபு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இதுவே வழக்கின் முக்கிய திருப்பமாக அமைந்தது.

இச்சொல்லை வைத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிஸார், பாடசாலையில் தொடர்ச்சியாகச் சமூகமளிக்காத 5 பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கண்டறிந்தனர்.

அவர்களில் இருவர் கடந்த சில நாட்களாக பெருமளவு பணத்தைச் செலவழித்து விருந்துகளை நடத்தி வந்ததை அறிந்து அவர்களைக் கைது செய்து விசாரித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் முன்னதாக விடுதியில் தங்கியிருந்தபோது, அவர்களின் பைகளில் இருந்து பணம் மற்றும் கைபேசி மீட்கப்பட்டதால் அதிபர் ரூபா ரெட்டியால் கண்டிக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்து பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விடுதியிலிருந்து நீக்கப்பட்டு நாளாந்தம் வந்து செல்லும் மாணவர்களாக மாற்றப்பட்டிருந்தனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரமும், ஆடம்பர வாழ்க்கை ஆசையுமே இக்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

ஐந்து நாட்களாகத் திட்டம் தீட்டி, அதிபரின் வீட்டைக் கண்காணித்த அம்மாணவர்கள், கைரேகைகள் சிக்காமல் இருக்க உறைகள் (Gloves) மற்றும் கத்தியை வாங்கியுள்ளனர்.

சம்பவத்தினத்தன்று மங்கி தொப்பி (Monkey Cap) அணிந்து வீட்டிற்குள் நுழைந்த ஒரு மாணவன், படுக்கையறையிலிருந்த 2.50 இலட்சம் ரூபாவைத் திருட முயன்றுள்ளான்.

அப்போது அவனது தொப்பி நழுவியதால் அதிபர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். இதனால் பயமடைந்த அம்மாணவன், அதிபரை 27 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளான்.

கொலைக்குப் பிறகு இரத்தக் கறை படிந்த ஆடைகளைப் புதைத்து ஆதாரங்களை அழிக்க முயன்ற அம்மாணவர்கள், திருடிய பணத்தில் கோவாவிற்குச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

மேலும், விரைவாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து இவர்கள் யூடியூப் (YouTube) தளத்தில் தேடியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரத்தக் கறை படிந்த ரூபாய் நோட்டுகள் உட்பட 1.54 இலட்சம் ரூபா பணம், வாங்கப்பட்ட புதிய ஐபோன் (iPhone) மற்றும் அதிபரின் கைபேசி ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி