ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் தோல்வி – ஒருவர் பலி
ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறிய படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
110க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, நேற்றுக் காலை கிராவ்லைன்ஸ் Gravelines பகுதியில் மீட்பு கப்பல் ஒன்றால் இனங்காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை தற்போது ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சிறிய படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கடலோரக் காவல்படையினர் கூடுதல் விழிப்புடன் இருப்பதாகவும், கூறப்பட்டுள்ளது.




