இலங்கை செய்தி

சர்வஜன வாக்கெடுப்பு: சட்டமா அதிபர் திணைக்களம் கூறியது என்ன?

22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது

22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசாங்கம் என்ன செய்யும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “22-ஆவது திருத்தச் சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது என்றே அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. சட்டமா அதிபர் திணைக்களமும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற சட்ட விளக்கத்தையே எமக்கு வழங்கியுள்ளது.

இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமையவே அரசாங்கத்தின் இறுதி முடிவுகள் அமையும்” எனக் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை