ஐரோப்பா

பிரித்தானியாவில் 140000 பேரின் வாகன உரிமங்கள் இரத்து

பிரித்தானியாவில் வாகன ஓட்டிகளின் மருத்துவ நிலைமை தொடர்பில் DVLAஇற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறிவுறுத்தலுக்கு அமைய தகவல் தெரிவித்திருந்த 01 இலட்சத்து 40 ஆயிரம் பேரின் வாகன உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிநபர் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், உரிமங்கள் திரும்பப் பெறப்படலாம்.

வயதான ஓட்டுநர்கள் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்த அரசாங்கம் தயாராகி வரும் வேளையில், இந்த சமீபத்திய அறிவிப்பு வந்துள்ளது.

இதன்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தகுதியானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க, கட்டாயப் பார்வைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பர்மிங்காம் லைவ் செய்தி வெளியிட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்