தலிபான் ஆட்சியில் பெண் துன்புறுத்தல் – ICC நீதிமன்றம் விசாரணை
தலிபான்கள் பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பில் தனி விசாரணையைத் தொடங்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணையானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்ததாகக் கூறப்படும் குற்றங்களையும் உள்ளடக்கிய விசாரணையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த விசாரணையில் வொஷிங்டன் தலையிடுவதை அல்லது அதன் அழுத்தத்தை குறைக்கிறது.
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான்களின் குற்றங்கள் குறித்த தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
“இந்த விசாரணை தலிபான் தலைமை மற்றும் பெண்கள், அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துதல், அடிப்படை உரிமைகளைப் பறித்தல், திட்டமிட்ட கைதுகள் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் மீது கவனம் செலுத்துவதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




