ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

குளிர்காலத்திற்கு முன்னதாக எரிவாயுவை சேமித்துவைக்க வேண்டிய சூழல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகள் ஆசியாவிற்கு அதிகளவில் திருப்பி விடப்படுவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் மற்றும் உலகின் எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம்  பங்களிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடல் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய எரிவாயு சேமிப்பிடம் ஜூலை மாத இறுதியில் வெறும் 05 சதவீத சேமிப்பு மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட சுமார் 12 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும், ஐந்தாண்டு சராசரியை விட 16 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும் உள்ளது என்று எரிசக்தி சந்தை நுண்ணறிவு நிறுவனமான மான்டெல் தெரிவித்துள்ளது.

“ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக LNG ஓட்டத்தில் தொடர்ச்சியான இடையூறுகள் இருப்பதால், குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் ஐரோப்பாவின் எரிவாயு சந்தையில் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்