இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் எப்போதும் பகைமை உணர்வே இருந்து வருகின்றது. ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்வதுகூட இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை. இஸ்ரேல் மற்றும் ஈரானின் தேசியக் கொடிகளை காண்பிக்கும் படம் இது. உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: ஈரான் கடும் எச்சரிக்கை

  • June 18, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்திய பின்னரும், இஸ்ரேல் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனான்மீதான தாக்குதலும் இருத்தப்பட […]

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பதவி வகித்த சுகீஸ்வர பணடார இலங்கை செய்தி

இரட்டை சம்பளம்: கோட்டாபயவின் செயலாளர் கைது

  • June 18, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான நடப்பு விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்குரிய சம்பளம் மற்றும் மேலுமொரு அரச பதவிக்குரிய […]

இலங்கை

வர்த்தக நடவடிக்கையில் டொலருக்கு பதிலாக ரூபாயை பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வு

  • June 18, 2026
  • 0 Comments

வர்த்தக நடவடிக்கைகளின்போது உள்ளுர் நாணயங்களை பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கவும், டொலர் ஏற்ற இறக்கங்களிலிருந்து இருதரப்பு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும் தொடர்புடைய   பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக  கூறப்படுகிறது. இந்தியா-இலங்கை வர்த்தக வழித்தடத்தை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான வட்டமேசை மாநாடு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் இரு நாடுகளிலிருந்தும் அரசாங்க நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதித்துறை அமைப்புகள், தொழில்துறைத் தலைவர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் […]

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதையடுத்து சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது. குறித்த நீரிணைமீள திறக்கப்பட்டது உலக நாடுகளுக்கு ஆறுதல் அளிக்கின்றது. உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தினால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதையடுத்து சர்வதேச சந்தையில், எகிறிய கச்சா எண்ணெய் விலை சரிய ஆரம்பித்தது. இந்நிலையில் இணையவழியில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு விலை மேலும் குறைவடைந்துள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து பாதை மீண்டும் திறக்கப்பட்டது சந்தையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரத் தொடக்கத்தில் சுமார் 86 டாலராக இருந்த […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் நாளை நேரடி பேச்சு!

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து, Buergenstock நகரில் நாளை இடம்பெறவுள்ளதை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த முக்கியத்துவமிக்க சந்திப்பில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் சமரசத் தீர்வாளர்களாகப் பங்கேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளன. ஏற்கனவே இரு நாட்டுத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைய வழியில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த நேருக்கு நேர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு நடைபெறாது என்று ஈரான் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

இங்கிலாந்தின் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் இடைதேர்தல் – கடுமையாகும் மும்முனை போட்டி

  • June 18, 2026
  • 0 Comments

வடமேற்கு இங்கிலாந்தின் மேக்கர்ஃபீல்ட்  (Makerfield) தொகுதியில் இன்று இடைத்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து  தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது, பின்வரிசை உறுப்பினர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), இத்தொகுதியில் வெற்றி பெற்றால், தலைமைப் பதவிக்காக சர் கெய்ருக்கு சவால் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ரிஃபார்ம் யுகே கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் கென்யனுக்கும் (Robert Kenyon)  இத்தொகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. […]

வைத்தியசாலை வளாகத்தில் இருந்து சடலமாக பெண் மீட்கப்படும் காட்சி. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கள ஆய்வை மேற்கொண்டனர். இலங்கை செய்தி

காதலி சடலமாக மீட்பு – காதலனுக்கு வலை: நடந்தது என்ன?

  • June 18, 2026
  • 0 Comments

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர். உயிரிழந்த பெண் நேற்று (17) சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் (16) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கி இருந்துள்ளார். வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷியாமா தர்ஷனி (33) என்ற இப்பெண், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். கன்னொருவ பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் கடந்த […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த கலகத் தடுப்பு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம்

  • June 18, 2026
  • 0 Comments

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் மீது நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்ள பிரான்ஸ் கலகத்தடுப்பு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுடன் செய்துக்கொண்ட 660 மில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பிற்கு அமைய Compagnies Républicaines de Sécurité (CRS) அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸின் கலவரத் தடுப்பு அதிகாரிகள், தங்களின் பொது ஒழுங்கு அதிகாரங்களின் ஒரு பகுதியாக நீர்த்தாரை பீரங்கிகள், CS வாயு மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தக் கோர சுதந்திரம் பெற்றுள்ளனர் என தகவலறிந்த […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்பின் சகாக்கள் அதிருப்தி

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கிலான டாலர் பணத்தை வீணடிப்பதாகவும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், லெபனான் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாத […]

உலகம்

சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு நன்றி – ட்ரம்ப்

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் “நடுநிலையாக” இருந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்தும் தனது முயற்சிகளை அவர்கள் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் நிலைமையை மிகவும் சிறப்பாக மாற்றினார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஈரானால் தடுக்கப்பட்ட கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான […]