அடங்க மறுக்கும் இஸ்ரேல்: ஈரான் கடும் எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்திய பின்னரும், இஸ்ரேல் கட்டுப்படுவதாக தெரியவில்லை.
இந்நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெபனான்மீதான தாக்குதலும் இருத்தப்பட வேண்டும் என ஈரான் ஆரம்பம் முதலே வலியுறுத்திவருகின்றமை தெரிந்ததே.




