சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு வீரவணக்கம் செலுத்தினார் தொல். திருமாவளவன்
தமிழ்த் தேசிய மூத்தி அரசியல்வாதி மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.
இதன்போது சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.அவர் அஞ்சலி உரையும் ஆற்றினார்.
தமிழகத்தில் ஆளுங்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்காளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.




