ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் நாளை நேரடி பேச்சு!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்....

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து, Buergenstock நகரில் நாளை இடம்பெறவுள்ளதை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த முக்கியத்துவமிக்க சந்திப்பில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் சமரசத் தீர்வாளர்களாகப் பங்கேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அமுல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளன.

ஏற்கனவே இரு நாட்டுத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைய வழியில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த நேருக்கு நேர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பு நடைபெறாது என்று ஈரான் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், சுவிட்சர்லாந்து தற்போது இந்த அதிகாரப்பூர்வ உறுதிமொழியை வழங்கியுள்ளது.

இந்த சந்திப்பிற்கான விரிவான கால அட்டவணை மற்றும் கூடுதல் தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி