காதலி சடலமாக மீட்பு – காதலனுக்கு வலை: நடந்தது என்ன?
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றிலிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
உயிரிழந்த பெண் நேற்று (17) சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் (16) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனது காதலனுடன் தங்கி இருந்துள்ளார்.
வெலிகம பகுதியைச் சேர்ந்த பி.ஆர். ஷியாமா தர்ஷனி (33) என்ற இப்பெண், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.
கன்னொருவ பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் கடந்த 2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் நுவரெலியாவில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவரது சடலம் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
CCTV கமரா காட்சிகளின்படி, அந்தப் பெண்ணின் முகம் மூடப்பட்ட நிலையில் அவரது காதலனால் ஹோட்டலில் இருந்து வெளியே தூக்கிச் செல்லப்படுவதைக் காட்டுகின்றது.
தற்போது காதலன் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.





