காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி குறித்து மக்கள் மத்தியில் அச்சம்

  • June 18, 2026
  • 0 Comments

“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” இவ்வாறு மேற்படி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது […]

இலங்கை

சித்திரவதைக் கூடம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த உத்தரவு

  • June 18, 2026
  • 0 Comments

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள நிலத்தடிச் சிறையில் கள ஆய்வு நடத்திய திருகோணமலை நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன், மேலதிக விசாரணைகளைத் தொடருமாறும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். மேலும், முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில் காணொளிக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். பதினொரு இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் போகச் செய்வதற்கும், மேலும் பலரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்வதற்கும் ‘கன்சைடு’ என […]

யாழில் ரயில் விபத்தில் பலியான ராணுவ சிப்பாயின் சடலம் இலங்கை செய்தி

யாழில் ரயில் மோதி ராணுவச் சிப்பாய் பலி

  • June 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், அரியாலை-நெளுக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்,பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

UAE இல் சமூக ஊடகத் தடை : அரபு நாடுகளில் இதுவே முதல்முறை

  • June 18, 2026
  • 0 Comments

ஐக்கிய  அரபு அமீரகம் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகத்  தளங்களை  அணுகுவதற்கான வயதெல்லையை  15 ஆக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும் முதல் அரபு நாடாக UAE திகழ்கிறது. இது தொடர்பான சட்டவரைபு இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவது, பயன்படுத்துவது அல்லது இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையின் காரணமாக, அவர்களால் உள்ளடக்கத்தைப் பதிவிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ, பகிரவோ அல்லது பொதுக் […]

ஐரோப்பா

இடம்பெயர்வோரின் வயதை கணிக்கும் AI தொழில்நுட்பம் : உள்துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம்

  • June 18, 2026
  • 0 Comments

சிறு படகுகளில் இடம்பெயர்ந்தோரின் வயதை மதிப்பிடுவதற்காக செயற்கை நுண்றிவு கருவியை பயன்படுத்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மனிதாபிமான அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக வயது மதிப்பீட்டு (FAE) தொழில்நுட்பம், பதின்ம வயதினரைத் தவறாக வயது வந்தவர்களாக அடையாளம் காண்பதாகவும், இனப் பாகுபாட்டைக்” கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக,  சஹாரா,  ஆப்பிரிக்காவிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோரைக் கண்டறிவதில் மிகக் குறைந்த துல்லியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் 14 வயது சிறுமியை […]

உலகம்

நெதன்யாகு உடனான உறவில் விரிசல்? பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப்

  • June 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாகக் கேள்விக்குட்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல் மிகவும் வன்முறையானது மற்றும் தேவையற்றது என்று கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவைக் கையாள்வதற்கு சிரிய அதிபரே மிகவும் பொருத்தமான மற்றும் “திறமையான” நபர் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு “மேலும் பொறுப்புடன்” செயல்பட வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா பிரச்சினையை […]

உலகம்

ஒரு மணிநேரத்தில் ஒரு மில்லியன் – மஸ்கின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் தொழிலதிபர் ஆகியுள்ளார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, அவரது விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் பங்குகள் ஜூன் 12, 2026 அன்று பொதுப் பங்கு வெளியீட்டிற்கு வந்துள்ளது. இதனால், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.26 டிரில்லியன் டொலரை எட்டியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 150 டொலர் என்ற விலையில் வர்த்தகமாகின, இதன் மூலம் அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.77 […]

ஐரோப்பா

ரஷ்யாவை மூர்கமாக தாக்கிய உக்ரைன் – 555 ட்ரோனகள் ஊடுறுவல்

  • June 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையொன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக  கிரெம்ளின் குற்றம் சாட்டிள்ளது. நேற்று இரவு ரஷ்யாவின் பல பிராந்தியங்களில் 555 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் ஊடுறுவியதாகவும், அவற்றை  தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தலைநகரைக் […]

சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் Rafael Grossi உலகம் செய்தி

ஈரானில் களமிறங்க தயாராகும் சர்வதேச அணுசக்தி அமைப்பு

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை Atomic Energy Agency தற்போது முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல் இருக்கவும், கையிருப்பில் உள்ள யுரேனியத்தை முறையாகக் கையாளவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்த இரு தரப்பினரும் நல்லெண்ணத்துடன் செயல்படுவார்கள் என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் Rafael Grossi நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்தெந்த இடங்களைப் பரிசோதிக்க வேண்டும் என்பது […]

கொலம்பியாவின் Luis Diaz இரண்டாவது கோலை அடித்த பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். செய்தி விளையாட்டு

அதிர்ந்தது அரங்கம்: கொலம்பியா வெற்றிநடை

  • June 18, 2026
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘கே’ பிரிவு (Group K) லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி தனது உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது. மெக்சிகோ சிட்டியின் புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் 80,000-க்கும் அதிகமான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது. இத்தாலியின் முன்னாள் நட்சத்திர வீரர் பாபியோ கன்னவாரோவின் (Fabio Cannavaro) பயிற்சியின் கீழ் களம் கண்ட உஸ்பெகிஸ்தான் அணி, […]