ஐரோப்பா முக்கிய செய்திகள்

இங்கிலாந்தின் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் இடைதேர்தல் – கடுமையாகும் மும்முனை போட்டி

வடமேற்கு இங்கிலாந்தின் மேக்கர்ஃபீல்ட்  (Makerfield) தொகுதியில் இன்று இடைத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலை தொடர்ந்து  தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது,

பின்வரிசை உறுப்பினர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), இத்தொகுதியில் வெற்றி பெற்றால், தலைமைப் பதவிக்காக சர் கெய்ருக்கு சவால் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ரிஃபார்ம் யுகே கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் கென்யனுக்கும் (Robert Kenyon)  இத்தொகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது.

இதற்கிடையே பர்ன்ஹாம்(Burnham), சர் கெய்ர் ஸ்டாமர் சவால் விடுத்தால், தலைமைப் பதவிக்கான போட்டியில் தானும் பங்கேற்பதாக முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்