இலங்கை

வர்த்தக நடவடிக்கையில் டொலருக்கு பதிலாக ரூபாயை பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வு

வர்த்தக நடவடிக்கைகளின்போது உள்ளுர் நாணயங்களை பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கவும், டொலர் ஏற்ற இறக்கங்களிலிருந்து இருதரப்பு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும் தொடர்புடைய   பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக  கூறப்படுகிறது.

இந்தியா-இலங்கை வர்த்தக வழித்தடத்தை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான வட்டமேசை மாநாடு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் இரு நாடுகளிலிருந்தும் அரசாங்க நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதித்துறை அமைப்புகள், தொழில்துறைத் தலைவர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா   “உள்ளூர் நாணயத் தீர்வு, பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கிறது, இரு திசைகளிலும் ஏற்படும் மாற்று இழப்புகளை நீக்குகிறது, மேலும் டொலர் ஏற்ற இறக்கங்களிலிருந்து இருதரப்பு வர்த்தகத்தைப் பாதுகாக்கிறது,” என்று  தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை, இது பற்றாக்குறையாக உள்ள அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் டொலர்கள் உண்மையிலேயே தேவைப்படும் பயன்பாடுகளுக்காகப் பாதுகாக்கப்படும் அதே நேரம்  ரூபாய்க்கு ரூபாய் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஏற்றுமதியாளர் அமெரிக்க டொலர்களுக்கு உரிய விலைப்பட்டியலை அனுப்பும்போதும், இலங்கை இறக்குமதியாளர்கள் டொலர்களில் பணம் செலுத்தும்போதும் இருதரப்பினரும் அதிகபடியான அல்லது தேவையற்ற நாணய அபாயத்தைச் சுமப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகளும் தங்கள் விளக்கக்காட்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் மூலம் இந்திய ரூபாயில் கடன்களை வழங்க அனுமதிக்கும் சமீபத்திய கொள்கை வழிகாட்டுதல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்