ஐரோப்பா

ரஷ்யாவின் வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்

  • July 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது தளவாட மையங்களில் ஒன்றில் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. வைல்ட்பெர்ரீஸ் நிறுவனம்  ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பதாக கூறியே உக்ரைன் இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் உக்ரைனின் இந்த கூற்றுக்களை […]

ஐரோப்பா

ரஷ்யா மீது தீவிர தாக்குதலை தொடுத்த உக்ரைன் – 08 பேர் உயிரிழப்பு

  • July 18, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் உள்ள இரண்டு வைல்ட்பெர்ரிஸ் கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிடங்குகள், தம்போவ் (Tambov) பிராந்தியத்தின் கோட்டோவ்ஸ்க் (Kotovsk) மற்றும் மொஸ்கோ பிராந்தியத்தின் எலக்ட்ரோஸ்டால்  (Elektrostal) ஆகிய இடங்களில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவிற்குள் சுமார் 500 மைல் தொலைவில் உள்ள எங்கெல்ஸ் விமானத் தளத்திலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ரஷ்யாவின் Tu-95 ரக மூலோபாய குண்டுவீச்சு விமானம் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவு – பிரான்ஸில் ஒன்றுக்கூடும் 25 நாடுகளின் தலைவர்கள்

  • July 12, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி நாளை மற்றும் நாளை மறுதினம் பாரிஸிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 14 கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி”யின் கூட்டத்தை நடத்த பிரான்ஸ் தயாராகி வருகிறது. இதன்போது உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில்  விவாதிப்பதற்காக 25 நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் பாரிஸில் ஒன்றுக்கூடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் உருவாக்கப்பட்டு, பிரித்தானியாவுடன் இணைந்து வழிநடத்தப்படும் இந்தக் கூட்டணி, தற்போது 37 நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இக்கூட்டணி சில சந்தர்ப்பங்களில்  […]

ஐரோப்பா

பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் – இருவர் பலி

  • July 11, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கடுமையான தாக்குதலில், ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆறு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கீவ், ஒடெசா மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனியப் படைகள் குறைந்தது இரண்டு குரூஸ் ஏவுகணைகளையும் 111 ட்ரோன்களையும் வெற்றிகரமாக இடைமறித்ததாக அறிவித்துள்ளன. ஆனால் வான் பாதுகாப்பு ஆயுதங்களின் கடுமையான பற்றாக்குறையால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. ஒப்புக்கொள்ளப்பட்ட வான் […]

ஐரோப்பா

உக்ரைன் மீது அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகும் ரஷ்யா : சீனா எச்சரிக்கை

  • July 10, 2026
  • 0 Comments

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சீனா ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கூற்றை உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அசோவ் கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்வதற்கும், மொஸ்கோ ஆக்கிரமித்துள்ள கிரிமியாவைத் தனிமைப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்காக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நான்கு நாட்களில், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் மீது ஏவுகணை மழை – பலர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இன்று அதிகாலை பாரிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ (Tymur ‌Tkachenko) டெலிகிராமில்  இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பொடில்ஸ்கி மாவட்டத்தில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நகரம் முழுவதும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

ஐரோப்பா

ரஷ்யாவின் மற்றுமோர் முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்

  • July 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள  முக்கிய எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு என்றும், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய ரஷ்ய கடற்படைத் தளமும் தாக்கப்பட்டதாகவும் கூறினார். இந்தத் தாக்குதல் குறித்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், அந்நகரம் ஒரு பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபகாலமாக, […]

ஐரோப்பா

பதற்றத்தை அதிகரிக்க உக்ரைன் சூளுரை : புட்டின் பிறப்பித்த உத்தரவு

  • July 4, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது  இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பத்து பேர் காயமடைந்தனர். இதற்கு முன்னர், கீவ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்துள்ளன. உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு எதிரான “மிகப்பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதல்கள்” தொடர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கட்டளையிட்டுள்ளார். டான்பாஸ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய […]

ஐரோப்பா

உக்ரைனில் துக்க தினம் அனுஷரிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

ரஷ்யா நேற்று முன்தினம் நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைனில் 30 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து துக்க தினத்தை அனுஷரிக்கும் முகமாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே  வடக்கு சுமி பகுதியில் இன்று  ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில்  பெண் ஒருவர் மற்றும் அவரது கைக் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

  • June 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் நேற்றைய தினம் இரு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ​ டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார். அத்துடன் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த ஆலையின் சேதத்தால், கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. […]