ஐரோப்பா

ரஷ்யாவின் மற்றுமோர் முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள  முக்கிய எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு என்றும், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய ரஷ்ய கடற்படைத் தளமும் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்தத் தாக்குதல் குறித்து, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், அந்நகரம் ஒரு பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாக, ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான நீண்ட தூர ஆளில்லா விமானத் தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது, இது பரவலான எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

இதன் விளைவாக, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் சுமார் 43% முடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்