ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் நேற்றைய தினம் இரு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார்.
அத்துடன் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த ஆலையின் சேதத்தால், கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் உள்ள யாரோஸ்லாவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மொஸ்கோ மற்றும் யாரோஸ்லாவ் இடையேயான முக்கிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ரஷ்யாவில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




