உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ரஷ்ய கடும்போக்காளர்கள் அழைப்பு
உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் இராஜதந்திர வழிகளை கைவிட்டு போரை தீவிரப்படுத்துமாறு புட்டினிடம் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான கோரிக்கைகள் புதியதல்ல என்றபோதும் இந்த மாதம் உக்ரைன் மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரிமியாவை இலக்காகக் கொண்டு நடத்திய தாக்குதல்களும், பயணிகள் பேருந்துகள் மீது நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறிய இரண்டு கொடிய தாக்குதல்களும், அந்தக் கோரிக்கைகளை மேலும் கூர்மையாக்கித் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த கோரிக்கைளில் முழுமையான அணிதிரட்டல், கீவ்வின் அரசாங்கப் பகுதியை அழித்தல், ஜனாதிபதி வொலோடிமிர் […]











