பதற்றத்தை அதிகரிக்க உக்ரைன் சூளுரை : புட்டின் பிறப்பித்த உத்தரவு
உக்ரைன் மீது இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பத்து பேர் காயமடைந்தனர்.
இதற்கு முன்னர், கீவ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்துள்ளன.
உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு எதிரான “மிகப்பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதல்கள்” தொடர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கட்டளையிட்டுள்ளார்.
டான்பாஸ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய போக்குவரத்து மற்றும் தொழில்துறை மையமான கோஸ்டியாண்டிநிவ்கா (Kostiantynivka) என்ற முக்கிய உக்ரைனிய நகரைக் கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





