ஏமன் மீது சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதல் – பற்றி எரியும் எண்ணெய் ஆலை
சவூதி அரேபியா இன்று ஏமனின் சனா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஹுதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் ஹூதிகளுடன் தொடர்புடைய தொலைகாட்சியொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவூதி எதிரி விமானங்கள்” சனா மீது 26 தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சவூதி தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் இருந்து தீப்பிழம்புகளும் புகையும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அதிகாரிகளும் ஹூதிகளும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.
ஈரான் ஆதரவு பெற்ற இந்தக் குழு, யேமனில் நடக்கும் போரின் ஒரு பகுதியாக, சமீப வாரங்களில் அந்த இராச்சியத்தில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருன்றமை குறிப்பிடத்தக்கது.




