உக்ரைனில் துக்க தினம் அனுஷரிப்பு
ரஷ்யா நேற்று முன்தினம் நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைனில் 30 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து துக்க தினத்தை அனுஷரிக்கும் முகமாக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இதற்கிடையே வடக்கு சுமி பகுதியில் இன்று ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் பெண் ஒருவர் மற்றும் அவரது கைக் குழந்தை உள்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமீபத்திய காலமாக உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக பாரிய தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது. குறிப்பாக எண்ணெய் நிலையங்கள் மீது தனது தாக்குதல்களை முடக்கிவிட்டுள்ளது.
இதன்காரணமாக ரஷ்யாவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையிலேயே ரஷ்யா கீவ் மீது பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





