ஐரோப்பா

ரஷ்யா மீது தீவிர தாக்குதலை தொடுத்த உக்ரைன் – 08 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள இரண்டு வைல்ட்பெர்ரிஸ் கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கிடங்குகள், தம்போவ் (Tambov) பிராந்தியத்தின் கோட்டோவ்ஸ்க் (Kotovsk) மற்றும் மொஸ்கோ பிராந்தியத்தின் எலக்ட்ரோஸ்டால்  (Elektrostal) ஆகிய இடங்களில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரஷ்யாவிற்குள் சுமார் 500 மைல் தொலைவில் உள்ள எங்கெல்ஸ் விமானத் தளத்திலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், ரஷ்யாவின் Tu-95 ரக மூலோபாய குண்டுவீச்சு விமானம் ஒன்றை உக்ரைனின் பாதுகாப்பு சேவை அழித்ததாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கீவ் நகரில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் உக்ரைன் இராணுவத்தினர் ரஷ்யா மீது கோர தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்