தலைமறைவான ஞானசார தேரர் கைது
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, திநியாவல பகுதியில் வைத்தே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.





