செய்தி விளையாட்டு

மைதானத்தில் கலவரம்: ஹைட்டி கால்பந்து அணிக்கு தடை !

டொமினிகன் குடியரசிற்கும் ஹைட்டிக்கும் இடையே நடைபெற்ற (CONCACAF Nations League) கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட இரசிகர்களின் கலவரத்தைத் தொடர்ந்து, ஹைட்டி நாட்டின் தேசிய கால்பந்து அணி தனது நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்த டொமினிகன் குடியரசு தடை விதித்துள்ளது.

டொமினிகன் குடியரசிற்கும் ஹைட்டிக்கும் இடையே நடைபெற்ற (CONCACAF Nations League) கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட இரசிகர்களின் கலவரத்தைத் தொடர்ந்து, ஹைட்டி நாட்டின் தேசிய கால்பந்து அணி தனது நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்த டொமினிகன் குடியரசு தடை விதித்துள்ளது.

சாண்டோ டொமிங்கோவில் உள்ள ‘பெலிக்ஸ் சான்செஸ் ஒலிம்பிக் மைதானத்தின்’ நடைபெற்ற இப்போட்டியின் போது இரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளில், நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு ஆதரவாளர்கள் சிலர் மைதானத்திற்குள் நுழைய முயன்ற காட்சி பதிவாகியிருந்தது.

இது குறித்துப் பேசிய டொமினிகன் குடியரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் கெல்வின் குரூஸ் (Kelvin Cruz),

“கோடிக்கணக்கில் செலவழித்துப் பராமரிக்கப்படும் விளையாட்டு மைதானத்தில் இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனக் கூறி இந்தத் தடையை அறிவித்தார்.

ஜனாதிபதி லூயிஸ் அபினாடரும் (Luis Abinader) இத்தடைக்குத் தனது முழு ஆதரவை வழங்கி, இதுவே அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஹைட்டி தூதரகம், விளையாட்டு மைதானங்களில் ஏற்படும் உணர்ச்சிவசப்பட்ட சம்பவங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

இப்போட்டியில் ஹைட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் டொமினிகன் குடியரசை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சன்டர்லேண்ட் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் வில்சன் இசிடோர் (Wilson Isidor) இரண்டு கோல்களை அடித்து ஹைட்டியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இவெற்றியின் மூலம் ‘குரூப் ஏ’ பிரிவில் ஹைட்டி அணி 9 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி