ஐரோப்பா

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேனில் இருந்து சடலம் கண்டெடுப்பு

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்சில் உள்ள நெடுஞ்சாலை ஓய்வுதளம் ஒன்றில் குறித்த வாகனம் நிறுத்தப்பட்டபோது இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 47 வயடைய ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் துப்பாக்கிச்சூட்டு காயங்களால் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் குறித்த வாகனத்திற்குள் “பிரான்ஸ் எல்லைக்குள் முறையற்ற வகையில் தங்கியிருந்த சுமார் 10 வெளிநாட்டினர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பிறகு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ராய்ஸ் நகர அரசு வழக்கறிஞர் இசபெல் வெரிசிமோ (Isabelle Verissimo) தெரிவித்துள்ளார்.

அவர் மீது கொலை, கொலை முயற்சி, அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக வெளிநாட்டவர் ஒருவர் பிரான்சுக்குள் முறையற்ற வகையில் நுழைவதற்கும், நகர்வதற்கும் மற்றும் தங்குவதற்கும் உதவுதல், மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக ஆள் கடத்தலில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று  இசபெல் வெரிசிமோ (Isabelle Verissimo) தெரிவித்துள்ளார்.

குற்றம் நடந்த இடத்திற்கு வடக்கே உள்ள ரெய்ம்ஸ் (Reims) நகர சட்ட அமலாக்கப் பிரிவு இந்த சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்