அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம்?

“இந்தியாவுடன் இன்று சுமூகமான உறவை பேணும் ஜே.வி.பியினர் அன்றும் இதே உறவை முன்னெடுத்திருந்தால் 60 ஆயிரம் இளைஞர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

“இந்தியாவுடன் இன்று சுமூகமான உறவை பேணும் ஜே.வி.பியினர் அன்றும் இதே உறவை முன்னெடுத்திருந்தால் 60 ஆயிரம் இளைஞர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய எண்ணம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. எனினும், ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தற்போது இந்தியா சென்றுள்ளார். சிலவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய தரப்பில் கோரப்பட்டுள்ளதோ தெரியவில்லை….

ரில்வின் சில்வா தரப்பு இன்றுபோல அன்றும் இந்தியாவுடன் சுமுக உறவை பேணி இருந்தால் 60 ஆயிரம் பேரை இழந்திருக்க வேண்டி வந்திருக்காது.

சிலவேளை மேற்படி சந்திப்பின்போது மாகாணசபைத் தேர்தல் பற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம். இந்தியாகூறும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமெனில் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக நாம் முன்னிலையாவோம்.

மாகாணசபைத் தேர்தலின்போது நாம் வலுவான அணியாக களமிறங்குவோம். அத்தேர்தலை பெறுவதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும்.”- என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை