ஐரோப்பா

ஒரே நேரத்தில் 05 அரச நிறுவனங்களில் வேலை – பிரித்தானியாவில் நூதன மோசடி

  • November 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் முழுநேரச் சம்பளத்தில் பல பொதுத்துறைப் பணிகளை இரகசியமாக செய்துவந்த நபர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது 09 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன. கிழக்கு லண்டனைச் சேர்ந்த காஷிம் சௌத்ரி, 2020 தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில்  ஒன்றுக்கும் மேற்பட்ட 05 அரச பணிகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது, இந்த காலப்பகுதியில் அவர் 350,000 பவுண்ட்ஸ் பணத்தை  மோசடியாகச் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நடுவர் குழு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

குடியேறிகளின் 30 ஆண்டுகால காத்திருப்பு – மஹ்மூத்தின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

  • November 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய உள்துறை  செயலர்  ஷபானா மஹ்மூத் கொண்டுவந்துள்ள புதிய குடியேற்ற சீர்திருத்தத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அகதிகளுக்கான காத்திருப்பு காலம் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளமையானது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்மொழியப்பட்ட கொள்கையின்படி, சிறிய படகுகள் போன்ற முறையற்ற வழிகளில் பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகள், நிரந்தரக் குடியுரிமைக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்தக் கடுமையான அணுகுமுறையானது, அபாயகரமான பயணங்களைத் தடுக்கவும், முறையற்ற குடியேற்றத்தைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் வட்டி விகிதம் அதிகரிப்பு – வீட்டு கடன் பெற்றவர்களுக்கு கூடுதல் சுமை

  • November 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மத்திய வங்கியான Bank of England இன்று தனது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி  3.75  வீதமாக இருந்த வட்டி விகிதமானது இன்று முதல் 04 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இது 0.25 சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பாகும். நாட்டின் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வானது கூடுதல் சுமையாக மாறும். இருப்பினும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட […]

ஐரோப்பா

குடியேற்ற அமைப்பை கடுமையாக்கும் பிரித்தானியா – புதிய சீர்த்திருத்தங்கள் அறிவிப்பு

  • November 2, 2026
  • 0 Comments

பிரித்தானியா தனது குடியேற்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தங்களை இன்று  அறிவித்துள்ளது. புதிய சீர்த்திருத்தங்களின்படி,  சில புலம்பெயர்ந்தோர் குடியேறுவதற்கு முன்பு 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  வெளியேறியதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளமையால் குடியேற்ற அமைப்பை கடுமையாக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் சில பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, உள்துறை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பணவீக்கத்தின் அளவு உச்சத்தை எட்டியது

  • October 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.  இது கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசலின் சராசரி விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் போக்குவரத்து செலவு உயர்ந்ததே இதற்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புதிய புள்ளிவிவரங்கள் குறித்து […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை – பிரித்தானியா அறிவிப்பு

  • October 8, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி அல்லது போக்குவரத்து, ராணுவத் தளவாட உற்பத்திக்கு உதவுதல் மற்றும் நிதிச் சேவை தொடர்பான தடைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானிய வெளியுறவுத்துறை புதிய தடைகளை அறிவித்துள்ளது. இதற்கமைய புதிதாக 38 தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போருக்கான நிதியுதவி மற்றும் தளவாடங்களை வழங்கும் ரஷ்யாவின் திறனைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொஸ்கோவின் போர் சார்ந்த பொருளாதாரத்தைத் தக்கவைக்கும் எண்ணெய் வருவாய், […]

ஐரோப்பா

UKவில் யூத சமூகம் மீது வெடிகுண்டு தாக்குதல் முயற்சி – சந்தேகநபர்களுக்கு தடுப்புகாவல்

  • October 3, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில்  யூத சமூகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படும் இருவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 36 வயதான சலாம் அஹ்மத்யான் Salam Ahmadyan மற்றும் 34 வயதான ரஹ்மான் சலேஹி Rahman Salehi ஆகியோர், கையால் செய்யப்பட்ட வெடிகுண்டை பயன்படுத்தி யூத சமூத்தின் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும்  நபர் ஒருவரின்  அறிவுறுத்தல்களின் பேரில், இவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விரு ஈரானிய பிரஜைகளும் மென்செஸ்டரின் யூத […]

ஐரோப்பா

UKவில் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி – 16000 பவுண்ட்ஸ் வரி

  • August 29, 2026
  • 0 Comments

எடின்பர்க்கில் உள்ள இரண்டாவது வீடு வைத்திருக்கும்  உரிமையாளர்களுக்கு சொத்து வரியாக வருடத்திற்கு 16000 பவுண்ட்ஸை விதிக்கும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கமைய இரண்டாவது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியாக தற்போது செலுத்தும் கட்டணத்தை விட 04 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியேற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில உரிமையாளர்களும் சொத்து நிபுணர்களும் எடின்பரோ நகர சபையின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது என விமர்சித்துள்ளனர். ஆனால், சில வீட்டுவசதி ஆர்வலர்கள் செல்வந்தர்களால் இந்த வரியை செலுத்த முடியும் எனக் […]

ஐரோப்பா

UKவில் தொலைபேசி திருட்டுகளை தவிர்க்க மின்சார மிதிவண்டிகள் அறிமுகம்

  • August 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தெருக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யவும், தொலைபேசி திருட்டுக்களை கையாளவும், பெருநகர கவால்துறை  மின்சார மிதிவண்டிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது. மெட் காவல்துறை 20 புதிய மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறது. இவை மணிக்கு 80 கி.மீ. வரை வேகத்தில் செல்லக்கூடியவை மற்றும் சந்தேக நபர்களைச் சாலைகளுக்கு வெளியேயும், படிக்கட்டுகளிலும் கூட பின்தொடரக்கூடியவை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மிதிவண்டிகள் குறிப்பாக கைபேசித் திருட்டுகளைக் கையாள உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மே மாதம் வரையிலான […]

ஐரோப்பா

UKவில் உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட மேயர்களுக்கு அனுமதி

  • August 23, 2026
  • 0 Comments

உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட அனுமதிக்கும் புதிய அதிகாரங்களை இங்கிலாந்து மேயர்களுக்கு பிரதமர் ஆண்டி பர்னம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான திட்டமிடல் முடிவுகளில் மேயர்கள் முடிவெடுப்பதற்கு ஏற்றவகையில் இந்த அதிகாரம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கமைய மேயர்கள் இனி 150-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட மேம்பாட்டுத் திட்டங்கள், 15,000 சதுர மீட்டருக்கும் அதிகமான வணிக வளாகங்கள், அல்லது குறைந்தது 30 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் […]