ஒரே நேரத்தில் 05 அரச நிறுவனங்களில் வேலை – பிரித்தானியாவில் நூதன மோசடி
பிரித்தானியாவில் முழுநேரச் சம்பளத்தில் பல பொதுத்துறைப் பணிகளை இரகசியமாக செய்துவந்த நபர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மீது 09 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு லண்டனைச் சேர்ந்த காஷிம் சௌத்ரி, 2020 தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட 05 அரச பணிகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது,
இந்த காலப்பகுதியில் அவர் 350,000 பவுண்ட்ஸ் பணத்தை மோசடியாகச் சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நடுவர் குழு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
07 மணிநேரம் நீடித்த விசாரணைக்கு பின் தவறான பிரதிநிதித்துவத்தின் மூலம் செய்த எட்டு மோசடிக் குற்றச்சாட்டுகளிலும், தகவலை வெளியிடத் தவறியதன் மூலம் செய்த ஒரு மோசடிக் குற்றச்சாட்டிலும் சௌத்ரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் அவருக்கு “மிகவும் கடுமையான சிறைத் தண்டனை” விதிக்கப்படலாம் என்று நீதிபதி கூறியுள்ளதுடன், பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.




