ஐரோப்பா

ஏலத்திற்கு வரும் அரிதான டைட்டானிக் டிக்கெட்

சதாம்டன் (Southampton) துறைமுகத்திலிருந்து டைட்டானிக் கப்பல் புறப்படுவதைப் பார்ப்பதற்காக வழங்கப்பட்ட பார்வையாளர் டிக்கெட் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஏல நிகழ்வானது வில்ட்ஷயரின் டிவைசஸ் (Devizes, Wiltshire) நகரில் இம்மாதம் 21 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.

குறித்த டிக்கெட்டானது 50,000 பவுண்டுகள் வரை விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அட்டை எலிசா டிப்டன் (Eliza Dibden) என்பவருக்குச் சொந்தமானது. இவருடைய 18 வயது மகன் வில்லியம், கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணியாகப் பயணம் செய்து, அந்தப் பேரிடரில் உயிரிழந்தார்.

இந்த வருகையாளர் அட்டையுடன், வில்லியம் டிப்டனின் முதல் திருவிருந்து (first communion) சான்றிதழும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்