ஐரோப்பா

குடியேற்ற அமைப்பை கடுமையாக்கும் பிரித்தானியா – புதிய சீர்த்திருத்தங்கள் அறிவிப்பு

பிரித்தானியா தனது குடியேற்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தங்களை இன்று  அறிவித்துள்ளது.

புதிய சீர்த்திருத்தங்களின்படி,  சில புலம்பெயர்ந்தோர் குடியேறுவதற்கு முன்பு 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  வெளியேறியதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளமையால் குடியேற்ற அமைப்பை கடுமையாக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் சில பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கான நிலையான தகுதிக்காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகத் தளர்த்தினார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் குடியேறும் உரிமை வழங்கப்படும் அதே வேளையில், கால்வாய் வழியாகச் சிறிய படகுகளில் வருபவர்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் உயர் தர ஆங்கிலம், குற்றப் பதிவு இல்லாதிருத்தல் மற்றும் தேசிய காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான பதிவு போன்ற சில தகுதிகளைப் பூர்த்தி செய்தால், பராமரிப்புத் துறையில் உள்ள தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் £125,000 (S$214,349) க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் அல்லது குறிப்பிட்ட விசாக்களைக் கொண்டவர்கள் மூன்று ஆண்டுகளில் குடியேற முடியும். சிறிய படகு மூலம் சட்டவிரோதமாக வருபவர்கள் 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்