ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை – பிரித்தானியா அறிவிப்பு
ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி அல்லது போக்குவரத்து, ராணுவத் தளவாட உற்பத்திக்கு உதவுதல் மற்றும் நிதிச் சேவை தொடர்பான தடைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானிய வெளியுறவுத்துறை புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இதற்கமைய புதிதாக 38 தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் போருக்கான நிதியுதவி மற்றும் தளவாடங்களை வழங்கும் ரஷ்யாவின் திறனைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொஸ்கோவின் போர் சார்ந்த பொருளாதாரத்தைத் தக்கவைக்கும் எண்ணெய் வருவாய், நிதிப் பரிமாற்ற வழிகள் மற்றும் ராணுவ விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றை இந்த தடை குறிவைத்துள்ளது.




