பிரித்தானியாவில் பணவீக்கத்தின் அளவு உச்சத்தை எட்டியது
பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது.
பெட்ரோல் மற்றும் டீசலின் சராசரி விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் போக்குவரத்து செலவு உயர்ந்ததே இதற்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ஜான் ஹீலி, “மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மோதல்களால் ஏற்படும் விலை உயர்வு, பிரித்தானியாவையும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளையும் பாதித்து வருகிறது எனத் தெரிவித்தார்.




