ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் வட்டி விகிதம் அதிகரிப்பு – வீட்டு கடன் பெற்றவர்களுக்கு கூடுதல் சுமை

பிரித்தானியாவின் மத்திய வங்கியான Bank of England இன்று தனது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இதன்படி  3.75  வீதமாக இருந்த வட்டி விகிதமானது இன்று முதல் 04 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இது 0.25 சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பாகும்.

நாட்டின் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வானது கூடுதல் சுமையாக மாறும்.

இருப்பினும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் பெற்றவர்களுக்கு, ஒப்பந்தக் காலம் முடியும் வரை வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேமிப்புக் கணக்குகள் வைத்திருப்பவா்களுக்கு வங்கிகள் வழங்கும் சேமிப்பு வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த வட்டி உயர்வு வீட்டுக் கடன் பெற்றவர்கள், புதிய வீடு வாங்கத் திட்டமிடுவோர் மற்றும் வங்கிக் கடன்களை நம்பியுள்ள குடும்பங்களின் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்