உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை : அபுதாபியில் முன்னெடுப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை அபுதாபியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பேச்சுவார்த்தையின் முதல் நாள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, முதல் நாள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், ஆனால் இன்னும் நிறைய வேலைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம் வொஷிங்டன் போருக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பேச்சுவார்த்தைகளை ஐரோப்பாவிற்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இரு நாடுகளும் சண்டையிட்டு சோர்வடைந்துவிட்டதாக தெரிவித்தார்.




