உலகம்

பன்னாட்டு குற்ற அமைப்புகளை ஒடுக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையில் ட்ரம்ப் கையெழுத்து

  • August 13, 2026
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு  ஆணையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணையானது அமெரிக்கர்களைத் தாக்குவதற்காக வெளிநாட்டு அதிகார வரம்புகளில் செயல்படும் பன்னாட்டு குற்ற அமைப்புகளுக்கு எதிராக இணையவழி கருவிகளைப் பயன்படுத்த கூட்டாட்சி சட்ட அமலாக்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதல், கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் கீழ் இந்த இணையவழி நடவடிக்கைகளை நடத்த உதவுவதற்காக, தனியார் துறையின் திறனையும் புதுமையையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மிரட்டிப் பணம் பறிக்கும் மென்பொருள் தாக்குதல்கள், […]

உலகம்

போரை விட பொருளாதார அழுத்தமே சிறந்தது – புதிய பாதையில் ட்ரம்ப்

  • August 10, 2026
  • 0 Comments

ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதை விட,   பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே சிறந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஈரானுடனான தற்போதைய மோதலில், அதிக பொறுமையுடனும் குறைந்த அழுத்தத்துடனும் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதற்கிடையில், அமெரிக்கா தன் மீதான எண்ணெய் தடைகளை நீக்கும் வரை, அந்த கடல்வழிப் பாதையைத் திறக்கப் போவதில்லை […]

உலகம் முக்கிய செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே போரை முடிவுக்கு கொண்டுவர தயாராகும் ட்ரம்ப்

  • August 9, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டால், அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸில் உள்ள மூலோபாய சரக்குப் பாதையில் கப்பல் போக்குவரத்து முழுமையாக மீட்டெடுக்கப்பட்டால், ஈரான் போரிலிருந்து வெளியேறி வெற்றியை அறிவிக்க அமெரிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தெஹ்ரான் “எந்த விலை கொடுத்தாவது” ஹோர்முஸ் […]

உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்பின் 15 அம்சத் திட்டம் நிராகரிப்பு – படைகளை திரும்பப் பெற வாய்ப்பில்லை

  • August 9, 2026
  • 0 Comments

ஹமாஸ் “உண்மையாகவே” ஆயுதங்களைக் கைவிடும் வரை இராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்துடன் , காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 15 அம்சத் திட்டத்தையும்  நிராகரித்துள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் “முழுமையான ஆயுதக் கைவிடுதலுக்கான” உடன்பாட்டை எட்டியுள்ளதாக ட்ரம்பின் அமைதி வாரியம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. ஆனால், இஸ்ரேல் “அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும்” முடிவுக்குக் கொண்டுவந்து, காசாவிலிருந்து தனது படைகளைத் திரும்பப் […]

உலகம்

பிறப்புரிமை, குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்து

  • August 7, 2026
  • 0 Comments

பிறப்புரிமை,  குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறையில் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா வருவதை குறிவைக்கிறது. இந்த விடயத்தை வெள்ளை மாளிகை பிறப்பு சுற்றுலா என்று அழைக்கிறது. இந்த முயற்சியை ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாகவே மேற்கொண்டிருந்தாலும் அதற்கு உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பிற்கு அப்பாற்பட்டது எனக் கூறி […]

உலகம்

பெட்ரோல் விலை அதிகரிப்பு – எண்ணெய் நிறுவனங்களை சாடிய ட்ரம்ப்

  • August 4, 2026
  • 0 Comments

எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எக்ஸான்மொபில் (ExxonMobilஷ) மற்றும் செவ்ரான்  (Chevron) ஆகிய முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்நிறுவனங்கள் நுகர்வோர் செலவுகளைக் குறைப்பதன் மூலம் “அதில் ஒரு பகுதியை பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். ஈரானில் நடந்து வரும் மோதலே இதற்குக் காரணம் என்று ட்ரம்ப் சாடியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள […]

உலகம்

ஒப்பந்தம் அல்லது சரணடைவது : இரண்டில் ஒன்றே வழி – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 3, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் தலைமைகள் தெரிவித்துள்ள நிலையில்,  ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார். ஈரானுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று ஒரு உடன்பாட்டிற்கு வருவது, அல்லது முழுமையாக சரணடைவது என்று கூறியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஈரான், பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என்றும், ஓமானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறியுள்ளதாகவும் […]

உலகம்

ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை – ட்ரம்ப் அறிவிப்பு

  • August 3, 2026
  • 0 Comments

06 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக ஈரானுடன் புதிய சுற்று பேச்சுவாரத்தைகளை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் புதிய பேச்சுவார்த்தைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஆசியாவில்  எண்ணெய் விலைகள் சரிந்தன. இதற்கமைய வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை, 4.7 சதவீதம் சரிந்து 80.72 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. முன்னதாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும்வரை ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். […]

உலகம்

ஈரான் மீது புதிய தாக்குதல் அலை – பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குறி

  • August 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, தெஹ்ரானை சரணடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இராஜதந்திர ஈடுபாடுகள் […]

உலகம்

ICC நீதிமன்றத்தை கலைக்க ட்ரம்ப் போராடுவது நெதன்யாகுவை காப்பதற்காகவா?

  • July 31, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை, தன்னைக் காப்பதற்காக அல்ல, மாறாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிறரை வழக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று  தெரிவித்தார். இந்த அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து ஐந்து உறுப்புநாடுகள் அதில் இருந்து விலகுவது தொடர்பில்  அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரூபியோ, மிகப்பெரிய […]