உலகம்

முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து

  • July 31, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். பனிப்போர் கால பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (DPA) பயன்படுத்தி அவர் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார். தொழிற் கழிவுகளில் உள்ள முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய தனிமங்களைத் தக்கவைக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான முக்கிய கனிமங்களின் […]

உலகம்

ரோபோக்கள் உள்ளிட்ட சீன தயாரிப்புகளின் இறக்குமதிக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை

  • July 28, 2026
  • 0 Comments

தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அபரிமிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கப்படும் முக்கியத் தொழில்களை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர முயலும் வகையில் சீனாவின் ரோபோக்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை தடைசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் நடவடிககை எடுத்துள்ளது. ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பேட்டரிகளை மின்கட்டமைப்புகள் மற்றும் தரவு மைய உபகரணங்களுடன் இணைக்க உதவும்  பவர் இன்வெர்ட்டர்களுடன், புதிய மனித […]

உலகம்

மொரோக்கோ நெடுஞ்சாலைக்கு ட்ரம்பின் பெயர் -மன்னருக்கு நன்றி

  • July 26, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் முக்கிய நெடுஞ்சாலையொன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மன்னர் ஆறாம் முகமதுவுக்கு ட்ரம்ப் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், மிகவும் மதிக்கப்படும் மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது அவர்களுக்கு நன்றி — இது ஒரு மாபெரும் கௌரவம்! என்றாவது ஒரு நாள், இந்த மாபெரும் நெடுஞ்சாலையின் முழு நீளத்திற்கும் பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன், விரைவில் அது […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிராக மாபெரும் தாக்குதலுக்கு திட்டம் – ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

  • July 24, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக ஒரு “பெரும் தாக்குதலை” நடத்துவதா இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல், இதுவரை கண்டிராத தாக்குதல்களை விடப் பெரியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “நான் ஒரு பெரும் தாக்குதலைப் பற்றி பரிசீலித்து வருகிறேன். இதுவரை நாம் கண்டிராத எதையும் விடப் பெரியது. நான் ஒரு முடிவை எடுப்பதற்கு மிக அருகில் இருக்கிறேன். நாங்கள் அதற்கு […]

உலகம்

பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

  • July 24, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வரும் 28 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வொஷிங்டனில்  சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாவில்லை. மத்தியக்கிழக்கில் அதிகரித்து வருகின்ற பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்  ஜெலன்ஸ்கியை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைனின் மேம்படுத்தப்பட்ட ட்ரோன்களை காணப்படுகின்ற நிலையில், அவற்றை அமெரிக்க பெறுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படலாம் எனவும் […]

உலகம்

“அணுசக்தி தளங்கள் மீது கை வைத்தால்” : ட்ரம்ப்புக்கு தெஹ்ரான் நேரடி எச்சரிக்கை

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானிய அணுசக்தி தளங்களுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க இலக்குகள் மீதும் ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ தொடுப்போம் என்று தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கணிசமாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, ‘பிக்காக்ஸ் மலை’ (Pickaxe Mountain’) அணுசக்தி தளம் மீது  அமெரிக்கா  மிக விரைவில்’ தாக்குதல்களை தொடங்கும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IRGCயுடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி நிறுவனம் […]

ஐரோப்பா

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர ஐஸ்லாந்து பேச்சுவார்த்தை

  • July 21, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதால் ஐஸ்லாந்துக்கு “இழப்பதற்கு எதுவும் இல்லை” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் ( Jean-Noel Barrot) நேற்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேருவது குறித்து   அந்நாடு பொதுவாக்கெடுப்பு நடத்த தயாராகி வருகின்ற நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு, ஐஸ்லாந்து மக்கள்   வாக்களிக்க […]

உலகம்

ட்ரம்பின் கருத்துக்களை உடனடியாக அறிய 01 கோடி ரூபாய் கட்டணம் அறவிட திட்டம்

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் தனது உண்மை தளத்தில் (Truth) பதிவிடும் செய்திகளை உடனடியாக பெற 01 கோடி ரூபாயை வசூலிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிடும் கருத்துக்கள் பங்குச் சந்தையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. உதாரணமாக, மற்ற நாடுகள் மீது விதித்த வரிகளை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்தது. அப்போது வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் அந்த நேரத்தில் பங்குகளை […]

உலகம்

விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்

  • July 16, 2026
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்கள், கலாச்சாரப் பரிமாற்றப் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்கும் பார்வையாளர்களை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் J விசாக்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கான I விசாக்கள் ஆகியவற்றுக்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 60 நாட்களில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறையின் […]

உலகம்

ட்ரம்பை விட சீன ஜனாதிபதியை அதிகம் விரும்பும் மக்கள் – கணக்கெடுப்பில் வெளியான தகவல்

  • July 16, 2026
  • 0 Comments

பெரும்பாலான இலங்கையர்கள் அமெரிக்காவை விட சீனாவுக்கே அதிக விசுவாசமாக இருப்பதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. 36 நாடுகளைக் சேர்ந்த 42,000-க்கும் மேற்பட்ட மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கருத்து கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பின் இறுதி முடிவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை விட சீனாவையே விரும்புகின்றன. மேலும், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை விட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உலக […]