ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை – ட்ரம்ப் அறிவிப்பு
06 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக ஈரானுடன் புதிய சுற்று பேச்சுவாரத்தைகளை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் புதிய பேச்சுவார்த்தைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஆசியாவில் எண்ணெய் விலைகள் சரிந்தன.
இதற்கமைய வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை, 4.7 சதவீதம் சரிந்து 80.72 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
முன்னதாக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும்வரை ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான பாதையாகவும், மோதலில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாகவும் மாறியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகள் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதே சமயம், அந்த ஜலசந்தி வழியாக ஒரு புதிய பாதை அமைப்பது குறித்து ஓமானுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




