போரை விட பொருளாதார அழுத்தமே சிறந்தது – புதிய பாதையில் ட்ரம்ப்
ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதை விட, பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே சிறந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ஈரானுடனான தற்போதைய மோதலில், அதிக பொறுமையுடனும் குறைந்த அழுத்தத்துடனும் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கா தன் மீதான எண்ணெய் தடைகளை நீக்கும் வரை, அந்த கடல்வழிப் பாதையைத் திறக்கப் போவதில்லை என்று ஈரான் கூறியுள்ளது.




