உலகம்

பிறப்புரிமை, குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்து

பிறப்புரிமை,  குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறையில் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

குறிப்பாக கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா வருவதை குறிவைக்கிறது. இந்த விடயத்தை வெள்ளை மாளிகை பிறப்பு சுற்றுலா என்று அழைக்கிறது.

இந்த முயற்சியை ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாகவே மேற்கொண்டிருந்தாலும் அதற்கு உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பிற்கு அப்பாற்பட்டது எனக் கூறி இரத்து செய்திருந்தது.

இருப்பினும் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை இந்த உத்தரவை கொண்டுவந்துள்ளார். புதிய உத்தரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று நிர்வாகம் வாதிடுகிறது,

ஏனெனில் அது பிறப்பால் குடியுரிமை பெறுவதற்கான குறுகிய, வரலாற்று விதிவிலக்குகளை மறுவிளக்கம் செய்ய முற்பவதாக தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவில் கையெழுத்திட்ட நாளிலிருந்து, பிறப்பு சுற்றுலா என்ற அந்தப் பழக்கம் இதன்மூலம் தடை செய்யப்படுகிறது,” என்று வெள்ளை மாளிகை உதவியாளர் ஸ்டீபன் மில்லர், ஓவல் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிர்வாக உத்தரவுகள், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு அரசாங்க ஊழியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அந்நிய எதிரிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் குழந்தைகளின் உரிமைகளையும் கட்டுப்படுத்துகின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்