ஈரான் மீது புதிய தாக்குதல் அலை – பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குறி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, தெஹ்ரானை சரணடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இராஜதந்திர ஈடுபாடுகள் குறித்து நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே தாக்குதல்களுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தனித்தனியாக, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற ஈரானிய எரிசக்தி வசதிகள் மீது சாத்தியமான தாக்குதல்களை நடத்துவது குறித்து வாஷிங்டன் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக அமையக்கூடும் என்று மனித உரிமைகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.





